Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றரை மணிநேர வெர்ஷனை பார்க்க முடியுமா ? வெற்றிமாறனிடம் கேட்ட இமைக்கா நொடிகள் பட வில்லன் அனுராக் காஷ்யப்.
அனுராக் காஷ்யப்
தமிழில் முரட்டு வில்லனாக வந்து அசத்தியவர். பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டாட் இயக்குனர். வித்யாசமான ஜானர்கள், யதார்த்தமான கதைக்களம் என்று படம் பண்ணுபவர். காங்ஸ்டார் ஜானரில் இவர் இயக்கிய காங்ஸ் ஆப் வாசிப்பூர் இன்றளவும் பெரிதாக பாராட்டப்படும் ஒன்று. அப்படமே நம் ‘சுப்ரமணியபுரம்’ பட இன்ஸபிரேஷன் என்றார்.

I N
இந்நிலையில் தனுஷின் வடசென்னை பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
#vadachennai the most original
Gangster film I have seen and so simply achieved .. @VetriMaaran you are consistently an amazing filmmaker .. one of the best we have ..— Anurag Kashyap (@anuragkashyap72) October 24, 2018
“நான் பார்த்தத்திலேயே சிறந்த காங்ஸ்டார் படம். தொடர்ச்சியாக அசத்தலாக படங்களை கொடுக்கும் படைப்பாளி வெற்றிமாறன். சிறந்த இயக்குனர் அவர்.”

vada chennai
When i was in China and #vadachennai played there, i was told by the selectors that the 3 and a half hour version they saw was even better. Can we have the three and a half hour version exclusively on @NetflixIndia or somehow can we see that @VetriMaaran
— Anurag Kashyap (@anuragkashyap72) October 25, 2018
மேலும் சீனாவில் படத்தை பார்த்த பொழுது, 3 1 / 2 மணி நேர வெர்ஷன் பார்த்தோம், அது இதை விட நன்றாக இருந்தது என ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார். நெட்டபிலிக்ஸ் அல்லது வேறு எதாவது வடிவில் அதனை பார்க்க முடியுமா வெற்றிமாறன்.” என கேட்டுள்ளார் அனுராக்.
