fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளும் பாலிவுட் இயக்குனர். ச்ச சான்ஸ் மிஸ் ஆயிடுச்சே என புலம்பல் வேறு.

super deluxe

News | செய்திகள்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளும் பாலிவுட் இயக்குனர். ச்ச சான்ஸ் மிஸ் ஆயிடுச்சே என புலம்பல் வேறு.

ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தியாகராஜன் குமாரராஜா எடுத்துள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்கின், நீலன் கே சேகர் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். படமும் மார்ச் 29 ரிலீசாகிறது.இப்படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Anurag Kashyap

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் (அதாங்க இமைக்கா நொடிகள் பட வில்லன்) ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்து விட்டு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

குமார ராஜாவின் சூப்பர் டீலக்ஸ் பார்த்து மெய்மறந்து விட்டேன். கொண்டாடுவதற்கு நிறைய அம்சம் உள்ளது.

படத்தை பார்த்த பின் இதில் பணி புரியும் வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் பல மடங்கு ஆகிவிட்டது. குமாரராஜா இக்கட்டான நிலையிலும், எதற்கும் துணிந்த படைப்பாளி. பல ட்ரிக்குகளை தன் வசம் வைத்துள்ளார். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. நீங்களே படத்தை பாருங்கள்.

கதையை எழுதும் வாய்ப்பை மிஸ் செய்தாரா அல்லது நடிக்கும் வாய்ப்பா எனபது தான் என்னவென்று தெரியவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top