fbpx
Connect with us

தனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி

News | செய்திகள்

தனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி

dhanush-anupamaதனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கொடி’ படத்தில் அண்ணன் – தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ஷாமிலி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஷாமிலி திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ‘பிரேமம்’ படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் ஷாமிலிக்கு பதிலாக நடிப்பது ‘பிரேமம்’ படத்தில் நடித்த மடோனா இல்லை என்றும் அதே படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் கேரக்டர் சிறியதாக இருந்தாலும் வலிமையான கேரக்டர் என்றும் படத்தின் திருப்புமுனைக்கு இந்த கேரக்டர்தான் காரணம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதுவே இவருக்கு முதல் தமிழ் படமாகும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top