பிகினி போட்டோ கேட்ட ரசிகர்.. செம பதிலடி கொடுத்த அனுபமா

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

தமிழில் தனுஷுடன் கொடி என்ற படத்தில் நடித்தவர் அடுத்ததாக அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இருந்தாலும் தமிழில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.

நடிகைகள் பெரும்பாலும் தங்களுடைய பொழுதைப் போக்க இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பிகினி போட்டோ அனுப்புங்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு அனுபவமாக கண்டிப்பாக அனுப்புகிறேன் உங்கள் வீட்டு அட்ரஸ் கொடுங்க பெரிய போட்டோ அனுப்புறேன் என ஏடாகூடமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அத்துமீறும் ரசிகர்களுக்கு தொடர்ந்து இதேபோல் பல நடிகைகள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

anupama
anupama