Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த ரெண்டு மட்டும் தான் எனக்கு அழகு.. வெள்ளந்தியாய் உண்மையை உளறிய அனுபமா!

மலையாள திரையுலகில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல  இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.

இவ்வாறு தென்னிந்திய திரைத்துறையில் ஹீரோயினாக கெத்து காட்டி வரும் அனுபாமா தற்போது தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

அதாவது அனுபமா அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவுக்கு வந்த புதுசில் ஒளிவுமறைவில்லாமல் பேட்டி கொடுத்ததால்தான் அதிகளவு விமர்சனத்துக்கு உள்ளானதாகவும், அதனால்தான் சிலகாலம் மோலிவுட்டில் நடிக்காமல் விலகி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அனுபமா.

அதனைத் தொடர்ந்து பேசிய அனுபமா, அவருடைய கண்களும் சிரிப்பும் தான் அவருக்கு அழகு என்றும், அவருடைய தலைமுடி அடர்த்தியாக இருக்கக் காரணம் தினமும் தேங்காய் எண்ணெய் பூசுவது தான் என்றும் கூறி அவருடைய அழகின் ரகசியத்தை வெளிப்படையாக உடைத்துள்ளார்.

மேலும் அனுபமா மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறாராம். தற்போது இவர் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, மற்ற நடிகைகள் தங்களுடைய அழகின் ரகசியத்தை டாப் சீக்ரெட்டாக மெயின்டெய்ன் செய்து கொண்டிருக்கும் நிலையில், அனுபமா கொடுத்துள்ள ஓபன் டாக் ரசிகர்களின் பாராட்டுக்களை தட்டி செல்கிறது.

anupama

anupama

Continue Reading
To Top