தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான அனு இம்மானுவேல், ரவி தேஜா நடிக்கும் அடுத்த படமான அமர் அக்பர் அந்தோணி படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார்.

Anu-Immanuvel
Anu-Immanuvel

தெலுங்கின் முன்னணி நடிகர்களான பவர் ஸ்டார் பவன் கல்யான் நடிப்பில் வெளியாம அஞ்ஞாதவாசி மற்றும் அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் கடந்தாண்டு அனு இமானுவேல் நடித்திருந்தார். இதன்மூலம் டோலிவுட்டின் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இணைந்த அவர், நடித்த ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவின. இதனால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரை அவர் மீது குத்தப்பட்டு விட்டது. இதனால், மீண்டும் வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  தியரி பாடமாகும் நடனக்கலை; புது முயற்சியில் களமிறங்கிய ஜூனியர் பிரபுதேவா
anu
anu

இந்தநிலையில், ரவி தேஜா நடிப்பில் ஸ்ரீனுவைட்லா இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடிக்க அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியிருந்தார். படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். ஆனால், தற்போது படத்தில் இருந்து விலகுவதாக அவர் தற்போது திடீரெனெ அறிவித்துள்ளார். நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ஷைலஜா ரெட்டி அல்லுடு படத்தின் தேதிகளோடு கிளாஷ் ஆவதால் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஆனால், படக்குழுதான் அவரை நீக்கியது என்ற ஒரு தகவலும் டோலிவுட் வட்டாரத்தில் கசியத் தொடங்கியது. ஆனால், அந்தத் தகவலை மறுத்துள்ள அமர் அக்பர் அந்தோணி படத்தின் தயாரிப்பு தரப்பு, படத்தில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு என்று விளக்கம் அளித்துள்ளது.

அதிகம் படித்தவை:  பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவரும் எங்கவீட்டு மாப்பிளை சுசானா.!