பட வாய்ப்பிற்காக ஏங்கும் அனு இமானுவேல்.. புகைப்படத்தை பார்த்து வாய்ப்புகளை கொடுக்கும் இயக்குனர்கள்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அனு இம்மானுவேல் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அதிக படங்கள் நடித்து வந்தார். இந்த நடிகை மாடலிங் மற்றும் திரைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பவன் கல்யாண், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இமானுவேல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பாண்டியராஜன் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனி கதாபாத்திரத்தில் குடும்பப்பாங்கான ரோலில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். நம்ம வீட்டு பிள்ளை படம் மிகப் பெரிய ஹிட்டானது.

anuemmanuel
anuemmanuel

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப்படங்களில் பிஸியாக இருந்த இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நடிகைகள் பொருத்தவரை படவாய்ப்பு குறையத் தொடங்கினால் உடனே கவர்ச்சியை கையில் எடுத்து விடுவார்கள். அதேபோல், இதுவரை குடும்பப் பாங்காக கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வந்த அனு இமானுவேல் தற்போது கவர்ச்சிக்கு தாவி உள்ளார்.

இவர் செம ஹாட்டான போட்டோஷூட் எடுத்த அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் லைக் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தப் புகைப் படங்கள் சில இயக்குனர்களின் கண்களில் பட்டு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்