Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தில் விட்ட வாய்ப்பை விக்ரம் படத்தில் பிடித்த பிரபல நடிகர்.. லோகேஷுக்கு பெரிய மனசுதான்!
மாஸ்டர் படத்தில் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்து விட்ட பிரபல நடிகருக்கு வலியப்போய் விக்ரம் படத்தின் வாய்ப்பைக் கொடுத்து லோகேஷ் மகிழ்ச்சியடைய வைத்த செய்தி தான் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த திரைப்படம் மாஸ்டர். முதன்முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் வசூலில் ஒன்றும் குறையில்லை.
அதுமட்டுமில்லாமல் படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. அதை மனதார ஏற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ் மீண்டும் நானும் விஜய்யும் இணையும் படத்தில் நீங்கள் சொல்லும்படி எந்த குறையும் இருக்காது என சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் தான் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ். மலையாளத்தில் செம பிரபலமான நடிகரான இவர் மாஸ்டர் படத்தில் இணைந்த போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமானது.
ஆனால் அதன்பிறகு கால்ஷீட் பிரச்சனையால் மாஸ்டர் படத்திலிருந்து விலகிய ஆண்டனி வர்கீஸ் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்து நடிக்க உள்ளாராம்.

antony varghese-cinemapettai
ஏதோ ஒரு வகையில் ஆண்டனி வர்கீஸ் லோகேஷ் கனகராஜை கவர்ந்து விட்டார் என்றே அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. அவருக்கான வெயிட்டான கதாபாத்திரம் படத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
