புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இதுதானே நானும் எதிர்பார்த்தேன்.. இந்த வாரம் எலிமினேட் ஆன கண்டெஸ்டண்ட் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்பு இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், நாட்கள் செல்ல செல்ல அவருடைய ஹோஸ்டிங் மீது நிறைய விமர்சனங்கள் முன்வைக்க படுகிறது. யாருக்கும் பேச வாய்ப்பு அளிக்க மறுக்கிறார், மனது புண்படும் போல நக்கல் செய்கிறார் போன்ற விமர்சனங்கள் முன்வைக்க பட்டது.

இந்த நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்நோக்கிகொண்டிருந்த நிலையில், அன்ஷிதா போட்டியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார். கடந்த வாரமே, என் அர்னவ் இல்லாத பிக் பாஸ் எனக்கு வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார். கடந்த வாரமே, என்னை அனுப்பிவிடுங்கள் என்று பிக் பாஸிடம் அன்ஷிதா கேட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வோட்டிங் மிகவும் குறைவாக இருந்த தர்ஷா குப்தா வெளியேறினார்.

ஆள விடுங்க டா சாமி.. முடியல..

இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது. இதில் ரஞ்சித், அருண், சத்யா, தீபக், சுனிதா, ஜாகுலின், அன்சிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் இருப்பதிலேயே கம்மியான வாக்குகளை அன்ஷிதா பெற்றதனால், அவர் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், வித்தியாசமான புது வார்த்தைகள் கொண்ட மீம் டெம்ப்ளட்டுகளை நமக்கு தந்த அன்ஷிதா வெளியேறிவிட்டாரே என்று அவருடைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அன்ஷிதாவோ, இத தானே நானும் எதிர்பார்த்தேன்.. ஆள விடுங்க டா சாமி.. உங்களோட முடியல என்னால என்ற மனநிலையில் வெளியேறியுள்ளார்.

- Advertisement -

Trending News