அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. டீசர் வெளியான அன்று இரவில் இருந்தே இணையம் முழுவதும், அஜித் பேசும் அந்த நெவர், எவர் டயலாக் தான். குறைந்த நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளது. பிரபலங்கள் பலரும் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர். நடிகர் அஜித் என்ன செய்தாலும் அதை டிரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள், தற்போது அஜித் மகள் அனோஷ்கா போட்டோவை இணையத்தில் டிரெண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.

நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய போட்டோவை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். மிகவும் கியூட்டாக தலையில் கரகம் வைத்து நடனம் ஆடும் அந்த போட்டோவை நெட்டில் வைரலாகி வருகிறது. #AnoushkaAjith என்ற ஹேஷ் டேக் மூலம் டிரெண்ட் செய்கின்றனர்.