Connect with us

Cinemapettai

வலிமை கதையில் இத மாத்துங்க, படம் மாஸாக இருக்கும்.. வினோத்துக்கு ஐடியா கொடுத்த தல அஜித்

ajith-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை கதையில் இத மாத்துங்க, படம் மாஸாக இருக்கும்.. வினோத்துக்கு ஐடியா கொடுத்த தல அஜித்

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் வலிமை.

அதிரடி, ஆக்க்ஷன், கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக வலம் வர இருக்கிறார்.

இந்த நிலையில் புதிதாக சில காட்சிகளை படத்தில் சேர்க்குமாறு  இயக்குனருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் தல அஜித்.

ஆக்க்ஷன் சீக்வென்ஸ் அதிகம் கொண்ட இப்படத்தில் பெண்களை கவரும் வகையில் சென்டிமேட் காட்சிகளை, இணைத்து கொள்ளுமாறு இயக்குனருக்கு அஜீத் யோசனை கூறியிருக்கிறார். இந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் அவருடைய ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அவருக்கு கைகொடுத்ததால் தான் அஜித் இவ்வாறு யோசனை கூறி இருக்கிறார். அதனடிப்படையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வலிமை படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் சென்னையில் தொடங்கியது.

இயக்குனருக்கு ஐடியா கொடுக்கிற அளவுக்கு தல வந்துட்டார் என்று இந்த விஷயத்தை அவரது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top