Connect with us

Cinemapettai

எந்நேரமும் போதையில் இருக்கும் ஆசிரியர்கள்! ஆஸ்கார் விருது பெற்ற ‘அனதர் ரவுண்ட்’ விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

எந்நேரமும் போதையில் இருக்கும் ஆசிரியர்கள்! ஆஸ்கார் விருது பெற்ற ‘அனதர் ரவுண்ட்’ விமர்சனம்

சில படங்கள் தான் மொழி, கதை, மேக்கிங் ஸ்டைல் பாகுபாடின்றி பார்ப்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்த நபர்களையோ அல்லது நடந்த நிகழ்வுகளையோ வைத்து ஒப்பிட்டு பார்க்க முடியும். அப்படி பட்ட படம் தான் ANOTHER ROUND. டேனிஷ் மொழி படம். குடிப்பழக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றது.

தாமஸ் விண்டர்பெர்கின் இயக்கியுள்ளார். மாட்சு மிக்கெல்சன், தாமசு போ லார்சன், மாக்னசு மில்லங்கு, லார்சு ரான்த் ஆகியோர் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

another round team

40 வயதில் வாழ்க்கை சலிப்பு தட்டிய ஸ்டேஜ் பலருக்கு வரும். அப்படி பட்ட சூழலில் இந்த நான்கு ஆசிரியர்கள் எடுக்கும் முடிவு தான் கதை. தங்கள் பணியில் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக ஒரு நாள், அவர்கள் உத்வேகம் திரும்பப் பெற உடலில் 0 .5 % மது (alcohol) அளவு குறைவு அதை சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் வாழ்க்கை மாறும் என முடிவு செய்கின்றனர்.

குடித்துவிட்டு நம் நாயகன் சிறப்பாக வேலை செய்கிறார், மேலும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறார். உடலில் மதுவின் சதவிகிதம் 0 .10 அளவு உயர்த்துகிறார். இவரின் நண்பர்களும் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். ஸ்கூலில் இவர்களை மாணவர்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக குடி அதிகரிக்க, இவர்கள் வாழ்க்கை வேறு கோணத்தில் செல்ல ஆரம்பிக்கிறது. இருவர் வீட்டில் பிரச்சனை முத்திப்போக குடி பழக்கத்தை விட முடிவு எடுக்கின்றனர்.

எனினும் ஒரு நண்பர் இந்த பழக்கத்தை விட முடியாமல் தற்கொலை செய்கிறார். விரக்த்தியில் இவர்கள் முழிக்க கிளைமாக்ஸ் வருகிறது. நம் நாயன் இறுதியில் எடுக்கும் முடிவுடன் சிறிய ட்விஸ்ட் வைத்து படத்தை முடிக்கின்றனர்.

சினிமாபேட்டை அலசல் – குடிப்பழக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதனை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர். அறிவுறுத்துவது போல எடுக்காமல், அவர் அவர் தான் சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதே மெஸேஜ்.

இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. டைம் கிடைக்கும் நேரத்தில் கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top