fbpx
Connect with us

Cinemapettai

‘மெர்சல்’ விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுத்தவர் கடும் விரக்தி.. அதிரடி முடிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘மெர்சல்’ விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுத்தவர் கடும் விரக்தி.. அதிரடி முடிவு

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மெர்சல். மேஜிக் நிபுணராகவும் மருத்துவராகவும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த மேஜிக்மேன் ராமன் ஷர்மா, தமக்கு, 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக, புகார் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸிடம், பலமுறை பணம் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் அந்த ​வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நடித்த 2.ஒ படத்தை டப்பிங் செய்த நிறுவனத்திற்கு, கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இருப்பதாக, லைகா நிறுவனம் மீது குற்றம் சாட்டி இருந்தனர். இப்பொழுது மெர்சல் படத்திற்கும் அதே கதிதான் நடந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top