fbpx
Connect with us

Cinemapettai

நல்லவேளை தப்பிச்சேன்! ஜி.வி.பிரகாஷிடமிருந்து ஓட்டமெடுத்த டைரக்டர்!

GV Prakash_Bruce Lee

News | செய்திகள்

நல்லவேளை தப்பிச்சேன்! ஜி.வி.பிரகாஷிடமிருந்து ஓட்டமெடுத்த டைரக்டர்!

மலைன்னு நம்புன சில விஷயங்கள் மல்லாக்கொட்டை ரேஞ்சுக்கு சின்னதாகிவிட்டால் யார் மனசுதான் தாங்கும்? அப்படி ஜி.வி.பிரகாஷை ஒரே ஒரு சிங்கிள் படம் வந்து கவிழ்த்துவிட்ட கொடுமையை எங்கே போய் சொல்வது? புரூஸ்லீ வருவதற்கு முன்பிருந்த ஜி.வி.பிரகாஷின் அந்தஸ்து, அப்படம் வந்த பின் ஒரேயடியாக குப்புற விழுந்ததால், இன்டஸ்ட்ரியில் படு குழப்பம்.

ஒருகாலத்தில் அஜீத் விஜய் மாதிரியான டாப் மோஸ்ட் ஹீரோக்களை வைத்து படம் எடுத்த இயக்குனர் எழிலுக்கு, அதற்கப்புறம் நிலைமை தட்டுத்தடுமாறி ஜி.வி.பிரகாஷ் லெவலுக்கு வந்து நின்றது காலக் கொடுமை. இருந்தாலும், ஜி.வி யின் பெயரை சொன்னால், குறைந்த பட்ச பைனான்ஸ் கிடைப்பதால் தைரியமாக ஒரு படத்தை துவங்க முற்பட்டார் எழில். தெலுங்கில் வந்த எக்கட போன சின்னப்பையா என்ற படத்தைதான் தமிழில் ரீமேக்குவதாக இருந்தார் இவர். படத்தில் பிரகாஷுக்கு ஜோடியாக ஹன்சிகாவும், சமந்தாவும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் சம்மதித்தார்களா, இல்லையா? என்கிற முடிவு தெரிவதற்குள் ராக்கெட் முனையில் ராவு காலம்!

இந்த புரூஸ்லீ வந்து எல்லாவற்றையும் கெடுத்தது. தப்பா முடிவெடுத்துட்டோமோ என்று அஞ்சிய எழில், ஜி.வி.பிரகாஷை கைகழுவி விட்டதாக கூறப்படுகிறது.

கதை கேட்கிற விஷயத்தில் கவனச் சிதறல் ஏற்பட்டது எவ்வளவு பெரிய தப்பு என்பதை புரூஸ்லீ விஷயத்தில் புரிந்து கொண்ட ஜி.வி.க்கு எந்த டைரக்டர் வந்து புது ரத்தம் பாய்ச்சப் போகிறாரோ? அந்த லிஸ்ட்டில் எழில் இல்லை என்பதுதான் இந்த நிமிஷத்து செய்தி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top