LCU-வில் இணையும் அந்த கருப்பு மாஸ் ஹீரோ.. கிடைக்கிற Gap-இல் goal அடிக்கும் லோகி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் என்ற உச்சத்தை பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வசூலை வாரிக்குவித்தார் இவர், தற்போது சூப்பர்ஸ்டார் வைத்து கண்ணும் கருத்துமாக எடுக்க பட்டு வந்த கூலி படத்திற்கு ஒரு ஆபத்து என்று வந்தபோது குறள் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (LCU) இதன் கீழ் கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களை இணைத்தார் லோகேஷ். இந்த நிலையில், கூலி படத்திற்கு பிறகு, மீண்டும் LCu கதைக்களத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த LCU கதைக்களத்தில் ஒரு படத்தின் கனெக்ட் மற்றொரு படத்திலும் இருக்கும். விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைத்து LCU வை தொடங்கினார் லோகேஷ். அதன்பின் லியோ படத்தில் கைதி படத்தில் வந்த நெப்போலியன் கதாபாத்திரத்தையும் கமலின் விக்ரம் கதாபாத்திரத்தையும் கொண்டு வந்து லியோ படத்தையும் LCU -வில் இணைத்தார்.

கார்த்தி, கமல், சூர்யா வரிசையில் LCUவில் இணையப்போகும் அடுத்த பிரபல ஹீரோ யார் தெரியுமா? காஞ்சனா படத்தை சீரிஸ் போல எடுக்க, அதில் தொடர்ந்து சலிக்காமல் நடிக்கும் நம் ராகவா லாரன்ஸ் தான். ஆம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ‘பென்ஸ்’ (BENZ).

இந்த படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையதாம். ஆகையால் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCUவில் தான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News