Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் பல கோடி கொடுத்து நயன்தாரா படத்தை வாங்கிய ஹாட்ஸ்டார்.. ஒரு ஹிட்டு கொடுத்ததுக்கு இப்படியா?

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் பல கோடி கொடுத்து நயன்தாரா படத்தை வாங்கிய ஹாட்ஸ்டார்.. ஒரு ஹிட்டு கொடுத்ததுக்கு இப்படியா?

கமர்சியல் நாயகியாக இருந்து தற்போது கதையின் நாயகியாக மாறியுள்ளார் நயன்தாரா. சமீபகாலமாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்து வருகின்றன.

இடையில் சில படங்கள் சொதப்பினாலும் கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி விட்டது. மேலும் ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பேர் பார்த்த படமாகவும் மூக்குத்தி அம்மன் படம் தான் உள்ளதாம்.

இதனால் நயன்தாராவின் மவுசு இந்திய அளவில் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் அடுத்ததாக நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி விட்டது.

தென்னிந்திய சினிமாவில் அதிக விலை கொடுத்து வாங்கிய சோலோ ஹீரோயின் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது நெற்றிக்கண். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 15 கோடி கொடுத்துள்ளதாம் ஹாட்ஸ்டார். நயன்தாராவே இதை எதிர்பார்க்கவில்லையாம்.

இத்தனைக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து முதன்முதலில் தயாரிக்கும் படம் நெற்றிக்கண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏற்கனவே மிஸ்கின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தின் காப்பி எனவும் டீசர் வந்த சமயத்தில் கிண்டலடிக்கப்பட்டது.

ஆனால் சைக்கோ படமே கொரியன் படத்தின் காப்பி தான் என நயன்தாரா ரசிகர்கள் பதிலுக்கு சமூகவலைதளங்களில் ஏட்டிக்கு போட்டியாக பேச அதுவே இந்த படத்திற்கு புரமோசனாக அமைந்து விட்டதாம். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

nayantharas-netrikann-direct-ott-release-on-hotstar

nayantharas-netrikann-direct-ott-release-on-hotstar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top