Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் படத்தின் மீது கேஸ் போடும் பிரபல இயக்குனர்? தொக்கா மாட்டிக்கிட்டமோ என கலக்கத்தில் அட்லீ
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில். இந்த படத்தை எழுதி இயக்கியி\ருந்தார் அட்லி. இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கதை என்னுடையது என ஒருவர் கேஸ் போட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து பிகில் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது. மேலும் படம் பெரும் லாபகரமாக அமைந்தது எனவும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது பிரபல இயக்குனர் சுசீந்திரன், பிகில் படத்தின் மீது நான்தான் கேஸ் போட்டிருக்க வேண்டும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான காரணத்தையும் அந்த பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
பிகில் படம் ஒரு வருடத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சாம்பியன் திரைப்படத்தின் கதை மூன்று வருடத்திற்கு முன்னாடியே செய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.
மேலும் இரு படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். யார் யாரோ என் கதை என பிகில் படத்தின் மீது கேஸ் போட்டிருந்தனர். பொதுவாக நான் தான் என்னுடைய கதை என கேஸ் போட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பெருந்தன்மையுடன் அதை விட்டுக் கொடுத்ததாகவும் தெரிகிறது. இது தளபதி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அட்லி திரைப்படம் என்றால் எந்தெந்த காட்சிகள் எங்கிருந்து உருவப்பட்டது என்பதை தெள்ளதெளிவாக நெட்டிசன்கள் புட்டு புட்டு வைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
