fbpx
Connect with us

விஜயதசமியையும் விட்டுவைக்காத இரண்டாம் குத்து சந்தோஷ்.. குவியும் கண்டனங்கள்!

irandam-kuthu-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயதசமியையும் விட்டுவைக்காத இரண்டாம் குத்து சந்தோஷ்.. குவியும் கண்டனங்கள்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக இயக்கி அதில் வெற்றி காணும் இயக்குனர் தான் சந்தோஷ்  பி ஜெயக்குமார். இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

தற்போது விஜய் விஜயதசமியை கூட விட்டு வைக்காமல் சந்தோஷ் செய்திருக்கும் காரியம் இணையத்தில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாயடைத்துப் போய் உள்ளனர்.

ஏற்கனவே வெளிவந்த இரண்டாம் குத்து  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் என இரண்டுமே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது என்பது நாம் அறிந்ததே.

ஏனெனில் அந்த அளவுக்கு  ஆபாசமாக இருந்தது அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும்.  இதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் பல கோலிவுட்டில் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இவ்வாறிருக்க விஜயதசமிக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சந்தோஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவில் வாழ்த்தோடு, ஆபாச படங்களுக்கு பூஜை செய்வது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனால் சந்தோஷுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

ஏனெனில் இந்துக்களின் புனித பண்டிகையான பண்டிகைகளில் ஒன்றான விஜயதசமியை கொச்சைப்படுத்தும் விதமாக  சந்தோஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

santhos-cinemapettai

santhos-cinemapettai

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்த பலர் ‘விஜயதசமியை கூட விட்டு வைக்கலையா டா நீங்க, என்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top