தமிழக அரசின் சுகாதரத்துறை அறிவித்துள்ள 104 எண்ணை தொடர்பு கொண்ட திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ப்ளூவேல் விளையாட்டில் இருந்து விடுவிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளான். உயிரைக் கொள்ளும் ப்ளூவேல் விளையாட்டுக்கு இதுவரை உலகம் முழுவதும் 130 க்கும் அதிமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

அந்த விளையாட்டு இந்தியாவிற்கும் பரவி வடமாநிலங்களில் சில மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனையடுத்து தமிழகத்திலும் தற்போது ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்களை குறித்து வைத்து ப்ளூவேல் விளையாட்டின் லிங்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விலையாட்டை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூரைச் சேந்த 12 வயது சிறுவன் ப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து இருக்கிறான். அந்த விளையாட்டில் சில கட்டங்களை விளையாடிய அந்தச் சிறுவன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளான்

இந்நிலையில், தன்னை தற்கொலை செய்யக் கூறுவதாகவும், மறுத்தால் தனது குடும்பதினரை கொன்று விடுவதாக அந்த விளையாட்டில் இருந்து கட்டளை வருவதாகவும் இந்த விளையாட்டில் இருந்து தன்னை மீட்குமாறு 104 எண்ணைத் தொடர்பு கொண்டு கோரியிருக்கிறான். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு இரு மனநல மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.