modi russia

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அணுஉலை பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையும் மீறி 2 அணுஉலைகள் இயங்கி வருகின்றன. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.  பல நூற்றாண்டுகளுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்பதே அப்பகுதி மக்களின் அச்சம்.

இந்நிலையில் ரஷ்ய துணை அதிபர் திமித்ரி ரோஜேசின் உடன் பிரதமர் நரேந்திர மோடி 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதில் கூடன்குளத்தில் 5 மற்றும் 6 ஆவது அணு உலை அமைக்கும் ஒப்பந்தமும் அடங்கியுள்ளன.

இந்தச் செய்தி அணு உலை எதிர்ப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் மட்டுமே கூடன்குளம் விவகாரத்தில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்கிறது.

கடலில் கொட்டிய எண்ணையை வாலியின் மூலம் மத்திய, மாநில அரசுகள் அள்ளியதும், நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டைகளை மிதக்க விட்டதும், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பற்றி தீயை கூட அணைக்க முடியாமல் கட்டிடத்தை இடிக்கப்போவதும் என நமது அரசு மற்றும் அதிகாரிகளின் திறனை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

இதுபோன்ற அரசு மற்றும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, அணுஉலை விபத்தை எப்படி தடுக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.