Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவைத் தொடர்ந்து முன்னணி தமிழ் நடிகரின் 25வது படமும் OTT ரிலீஸ்.. தலையில் துண்டைப் போட்ட தியேட்டர் ஓனர்கள்

தமிழ் சினிமாவில் சூரரைப்போற்று படத்தை சூர்யா OTT தலத்தில் கொடுத்தது தான் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அந்த பிரச்சினையை முடிவதற்குள் இன்னொரு பிரச்சனையை கிளப்பி உள்ளார் ஒரு முன்னணி நடிகர்.

தமிழில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது.

கடைசியாக ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான பூமி திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியில் மாறுதல்கள் ஏற்பட்டது.

இதனால் பூமி படத்தை உடனடியாக OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி. அதுவும் அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் OTT தளத்திற்கு சென்றுள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக தியேட்டர் ஓனர்கள். சமீபகாலமாக பெரும் லாபம் கொடுத்த திரைப்படங்களில் ஜெயம் ரவி நடிக்கும் படங்களும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சூர்யாவை தொடர்ந்து ஜெயம் ரவியும் இந்த காரியத்தை செய்ய உள்ளதால் மொத்தமாக தியேட்டர் ஓனர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனேகமாக பழையபடி தியேட்டரை இடித்து திருமண மண்டபங்களாக மாற்றி விடுவார்கள் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Continue Reading
To Top