Vasanth Ravi 1
வசந்த் ரவி

ராமின் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானவர். முதல் படத்திலே பல பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் கும்கி படத்தில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார், மேலும் போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது; சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் கை நழுவிப் போனது. இந்நிலையில் இவர் நடிக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

taramani

விறு விறு ஆக்ஷன் படமான இதை புதுமுக இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். இவர் புஷ்கர் – காயத்ரி மற்றும் ஆரண்யகாண்டம் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவியாராகப் பணியாற்றியவர், மேலும் இறுதி சுற்று படத்தில் வசனங்கள் எழுதியதும் இவரே.

shanthanu myskkin pc sreeram

சவரகத்தி படத்தை தொடர்ந்து சாந்தனுவை வைத்து படம் இயக்கவுள்ளார் மிஷ்கின். எனினும் வசந்த் ரவியின் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் பூசாரி வேடத்தில் நடித்துள்ளார் நம் மிஷ்கின்.

“மறுவார்த்தை பேசாதே” புகழ் தர்புக சிவா இசை அமைக்கவுள்ளார். வைரமுத்து, கபேர் வாசுகி பாடல் எழுதுகிறார்கள். ஜில் ஜங் ஜக், அவள் பட ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.