Tamil Cinema News | சினிமா செய்திகள்
அண்ணாத்த படத்தை பாதியிலேயே கைவிட்டாரா ரஜினி.. சம்பள விஷயத்தில் குளறுபடி!
கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா கேரியரின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம். இன்னும் கொஞ்சம் வயது ஆவதற்குள் தன்னால் முடிந்தவரை படத்தில் நடித்து விடலாம் என தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்தார்.
ஆனால் தற்போது நிலவிவரும் சூழ்நிலையால் ரஜினிகாந்த் அவ்வளவு எளிதில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை தள்ளப்பட்டுள்ளார். அதற்கு அவரது வயதும் கூட ஒரு காரணமாக சொல்லலாம்.
வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என வசனங்களில் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் சாதித்துக் காட்டியவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.
தற்போது வரை அவரது படங்களுக்கு உள்ள மார்க்கெட் குறையவே இல்லை என்பதுதான் அவருடைய வெற்றிக்கு சான்று. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென அந்த சூழ்நிலை நிலவியதால் படப்பிடிப்பு தடைபட்டது. மேலும் அந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க நிலையில் மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்பதிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன.
இருந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருந்தன்மையாக தன்னுடைய சம்பளத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும், மீண்டும் இனி சினிமாவில் நடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்பதைப் போலவும் கூறியதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
ஆனால் இவையெல்லாம் உண்மை இல்லை என்பதைப் போலத்தான் அறிவிப்புகள் வந்துள்ளன. அண்ணாத்த வருவார், ஆனால் கொஞ்சம் லேட்டாக வருவார் என்பதை போலதான் தெரிகிறது.
