fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியுடன் சண்டை போட கொடூர வில்லனை களமிறக்கிய சிறுத்தை சிவா.. டபுள் மாஸாக உருவாகும் அண்ணாத்த!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியுடன் சண்டை போட கொடூர வில்லனை களமிறக்கிய சிறுத்தை சிவா.. டபுள் மாஸாக உருவாகும் அண்ணாத்த!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படமாக ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா போன்ற பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு சண்டை காட்சிகள் கூடுதல் வலு சேர்க்கும்.

அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக ஏற்கனவே பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்திருக்கும் நிலையில் தற்போது பார்த்தாலே பயமாக இருக்கும் பாலிவுட் நடிகர் ஜாக்கி செராப் முக்கிய வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இவர் தமிழில் 2011 ஆண்டு வெளியான ‘ஆரண்யகாண்டம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதியின் பிகில் படத்தில் வில்லனாக திடீரென்று தோன்றி இருப்பார். அதைத்தொடர்ந்து ‘அண்ணாத்த’ படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உறுதி செய்து உள்ளனர். ஜனவரி மாதத்திலிருந்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே ‘அண்ணாத்த’ படத்தை கொண்டாட தொடங்கிவிட்டதால், இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி செராப் இணைந்திருப்பது இவர்களை மேலும் உற்சாகப்படுத்திள்ளது.

Continue Reading
To Top