சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவின் மனைவியாகவே வாழும் ஆனந்தி.. சாட்டையை சுழற்ற போகும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மகேஷ் தன்னுடைய அம்மாவை சமாளிக்க முடியாமல் ஆனந்தியை அன்புவின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

ஆனால் அன்புவின் அம்மா இந்த விஷயம் தெரிந்தால் பேயாட்டம் ஆடி விடுவார் என்பது அன்புக்கு மட்டும் தான் தெரியும். இருந்தாலும் ஆனந்தியை இந்த நேரத்தில் வெளியே அனுப்ப அன்புக்கு மனம் வரவில்லை. அதே நேரத்தில் தான் இவ்வளவு நேரம் கேட்டும் எதுவுமே சொல்லாமல் இருந்த ஆனந்தி அன்புவின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு உண்மையை சொன்னது மகேஷுக்கு கொஞ்சம் நெருடலாக தான் இருந்தது.

இருந்தாலும் அவனுடைய அப்பா அவனுக்கு போன் மேல் போன் போட்டதால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் ஆனந்தியை அன்புவின் வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டான். மகேஷ் போனபிறகு அன்புவின் மனசுக்குள் இருக்கும் அழகன் வெளியில் வர தொடங்கி விட்டான்.

ஆனந்திக்கு சாப்பாடு ரெடி பண்ணி அதை சாப்பிட வைத்தான் அன்பு. அந்த நேரத்தில் அழகன் அன்புக்கு ஒரு பெரிய தைரியத்தையே கொடுத்து விட்டான். அதே நேரத்தில் ஆனந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே புறக்கேறிவிட்டது.

இந்த நேரத்துல யார் நினைக்கிறாங்க என அன்பு கேட்க மகேஷ் சார் தான் என பற்றி நினைப்பார் என்று ஆனந்தி சொல்கிறாள். இது அன்புக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது. தன்னுடைய ரூமில் ஆனந்தியை தங்க வைத்து விட்டு அன்பு வேறொரு ரூமில் படுத்து கொள்கிறான்.

அன்புவின் மனைவியாகவே வாழும் ஆனந்தி

அன்பு காலையில் எழுந்திருக்கும் பொழுதே அவன் பெட் பக்கத்தில் காபி இருக்கிறது. ரூமை விட்டு வெளியில் வந்து பார்க்கும் பொழுது வீடு மொத்தமாக சுத்தம் செய்யப்பட்டு சாம்பிராணி புகை போடப்பட்டு அவனுடைய அப்பாவின் புகைப்படத்தில் விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது.

நிஜமாகவே ஆனந்தி அன்புவை திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டுக்கு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. காபியை சாதாரணமாக குடித்துக்கொண்டு அன்பு அமர்ந்திருக்கும் பொழுது திடீரென கேட்டை தட்டும் சத்தம் கேட்கிறது.

பால்காரனாக இருக்குமோ என அன்பு கேட்டை திறக்கும் பொழுது அவன் அம்மாவும் தங்கச்சியும் வந்து நிற்கிறார்கள். ஒரு வாரம் கழித்து வருகிறேன் சொல்லிட்டு ஒரே நாளில் திரும்பிட்டியே ஏன் என அன்பு தன் அம்மாவிடம் ரொம்பவும் ஏமாற்றத்துடன் கேட்கிறான்.

உடனே அன்புவின் அம்மா ஊரில் தலையாரி இறந்து விட்டார் அதனால் திருவிழாவை ரத்து செய்து விட்டார்கள் என சொல்கிறார். மேலும் வீட்டிற்குள் நுழைந்த அன்புவின் அம்மாவுக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இதையெல்லாம் செய்திருக்க வாய்ப்பே இல்லை, யார் இப்படி எல்லாம் செய்தது என கேட்கிறார். அன்பு நான் தான் இதையெல்லாம் செய்தேன் என ஓர் அளவுக்கு அவனுடைய அம்மாவையும் தங்கச்சியும் நம்ப வைக்கிறான்.

அதே நேரத்தில் ஆனந்தி எங்கே இருக்கிறாள் என அவன் தேடுகிறான். ஆனந்தி ரொம்பவும் சர்வ சாதாரணமாக எல்லா துணியை துவைத்து மொட்டை மாடியில் காய போட்டு விடுகிறாள். அப்போது அங்கே வந்த அன்பு இதையெல்லாம் யார் செஞ்சாங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன் ஏன் இப்படி பண்றீங்க என கேட்கிறான்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா மொட்டை மாடிக்கு வருவது போல் அந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. அன்புவின் அம்மா ஆனந்தியை அந்த இடத்தில் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்பது பெரிய சந்தேகமாக இருக்கிறது. அதே நேரத்தில் காயத்ரியின் பிரச்சனைக்காகத்தான் ஆனந்தி ஹாஸ்டலுக்கு லேட் ஆக வந்திருப்பது மகேஷுக்கு தெரிந்து விட்டது. இனி ஆனந்தியை ஹாஸ்டலுக்கு கூட்டிக்கொண்டு போய் வார்டனிடம் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறான் மகேஷ்.

- Advertisement -

Trending News