fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹாரர் கலந்த திரில்லரில் மிரட்டும் Annabelle Comes Home – திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

ஹாரர் கலந்த திரில்லரில் மிரட்டும் Annabelle Comes Home – திரைவிமர்சனம்.

திகில் பட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற படங்கள் தான் கான்ஜூரிங் பட வரிசை. அதன் கிளை கதை ஆக உருவானதே அன்னபெல்.

‘அன்னபெல்’ 2014-ல் , ‘அன்னபெல் கிரியே‌ஷன்’ 2017 இல் வெளியாகி ஹிட் அடித்தது. அதன் மூன்றாம் பாகமாகவும், கான்ஜூரிங் பட யூனிவெர்சில் ஏழாவது படமாக வெளியாகி உள்ளது ‘அன்னபெல் கம்ஸ் ஹோம்’.

1971 இல் எட் மற்றும் லோரன் இரண்டு நர்ஸ்கள் வீட்டில் அட்டகாசம் செய்த அன்னபெல் பொம்மையை எடுத்து தங்கள் வீடு நோக்கி வருகின்றனர். தனது திறனால் மற்ற துர் ஆத்மாக்களை தன் பக்கம் எழுத்து வசமாக்கும் திறன் உடைய அந்த பொம்பை எட்டை கொலை செய்ய முயல்கிறது. அதில் இருந்து தப்பி வந்து அந்த பொம்மையை மந்திரித்து விடுவதோடு மட்டுமல்லாது புனித கண்ணாடியின் பின் வைத்து விடுகின்றனர் தங்கள் வீட்டில்.

இந்த ஜோடியின் மகள் ஜூடி தன் பள்ளயில் கேலிபொருள் ஆகிறாள். அவளின் அப்பா – அம்மா செய்யும் வேலையினை வைத்து இவளை பலர் சீண்டுகின்றனர். இந்நிலையில் எட் மற்றும் லோரன் வெளியே செல்ல நேரிட, ஜூடியை பார்த்துக்கொள்ள பேபி சிட்டர் வருகிறாள். அவளின் நெருங்கிய தோழி எப்படியாவது இறந்த தன் அப்பாவுடன் பேச வேண்டும் என நினைத்து தந்திரமாக நட்பினை பகடையாக பயன்படுத்தி வீட்டினுள் வருகிறாள்.

அந்த இருவரும் அசந்த சமயத்தில் வீட்டின் கீழே சென்று ஆமானுஸ்ய சக்திகள் உள்ள பொருட்கள் பலவற்றை தொடுகிறாள், அன்னபேல் பொம்மையையும் விடுவித்து விடுகிறாள்.

அதன் பின் விபரீதங்கள் ஒவ்வொன்றாக நடக்க, வழக்கமான திகில் மர்மம் என விறுவிறுப்பாகிறது கதை. எட் – லோரன் சரியான சமயத்தில் வந்தனாரா, இந்த மூவரையும் காப்பாற்ற, அதுவரை ஜூடி எவ்வாறு இதனை சமாளித்தாள் என்பதே படத்தின் முழு கதை.

அலசல் – வழக்கமான திகில் படம் தான். எனினும் இப்படத்தில் ஜூடியின் பாத்திரம் தான் ஸ்பெஷல். தன் அம்மாவை போலவே இவளுக்கும் தெரியும் உருவங்கள், அவர்களின் செயலால் இவள் அடையும் பாதிப்பு என எமோஷனல் பேக்கேஜ் இப்படம். அசத்தலான கேமரா, கலக்கல் பின்னணி இசை, மெர்சல் நடிப்பு என கலக்கிவிட்டனர்.

வெர்டிக்ட் – ஹாரர் படம் என்றாலும், இப்படம் பெரிதும் நம்மை பயம்முடுத்தவில்லை என்பதே நிஜம். படம் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் ஜுமான்ஜி படத்தில் ஹாரர் கலந்துவிட்டனரோ என்ற நினைப்பே வந்தது. திகில் பட ரசிகர்கள் ஒருமுறை தாராளமாக பார்த்து வரலாம். எனினும் அனபேல்லின் கோரத்தாண்டவம், எட் – லோரன் திறன் என எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் உங்களுக்கு.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top