Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-sun-pictures

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவன்டா இப்படி கொளுத்திப் போட்டது? அண்ணாத்த விஷயத்தில் அப்செட்டான ரஜினி

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சென்ற தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இதுவரை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடாமல் படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர். ஒருவேளை ரிலீஸ் தேதியை மாற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசிக்கிறதா? எனவும் சந்தேகங்கள் எழுந்தன.

இந்த நிலையில்தான் திடீரென கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவி ரஜினியின் காதுக்குச் சென்று அவரை அப்செட்டாக்கியுள்ளதாம்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் அண்ணாத்த படத்தை நேரடியாக தியேட்டரில் வெளியீட்டு ரஜினியின் மாசை காட்டப் போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தியை கொளுத்திப் போட்டுவிட்டனர்.

எவன் பார்த்த வேலைடா இது என அண்ணாத்த படக்குழு செம கடுப்பில் இருக்கிறாராம். இந்த காலகட்டத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து புரமோஷன் செய்யும் படங்களே சராசரி வருமானத்தைத்தான் ஈட்டித் தருகிறது.

என்னதான் ரஜினி பெரிய மாஸ் நடிகராக வலம் வந்தாலும் அவருடைய படத்துக்கு என ஒரு விளம்பரம் செய்தால் தான் அதுக்கு கெத்து. புரமோஷன் விஷயத்தில் சன் நிறுவனத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படியிருக்கையில் யார் இந்த மாதிரி செய்தியை கிளப்பி விட்டது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

annatthe-deepavali-cinemapettai

annatthe-deepavali-cinemapettai

Continue Reading
To Top