fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அம்மா உணவகத்தை மிஞ்சும் அண்ணா உணவகம்.. ஒரு சாப்பாடு விலை தெரியுமா? ரோஜா அதிரடி அறிவிப்பு

anna-hotel-in-andhra

India | இந்தியா

அம்மா உணவகத்தை மிஞ்சும் அண்ணா உணவகம்.. ஒரு சாப்பாடு விலை தெரியுமா? ரோஜா அதிரடி அறிவிப்பு

நடிகை ரோஜா ஓ.எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு உயரிய பதவியும் வழங்கி பாராட்டி உள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த நடிகை ரோஜா தற்போது பல திட்டங்களை வகுத்து வருகிறார். 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

பின் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோஜா தமிழ் தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். தன்னை அறிமுகப்படுத்திய ஆர்கே செல்வமணி 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் சில தினங்கள் முன்பு பிறந்தநாளை கொண்டாடி மக்களுக்கு பயன்பெறும் வகையில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என்று ஹோட்டல் ஒன்றை நிறுவி உள்ளார்.

அந்த ஹோட்டலுக்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் வயிறார உணவு உண்டு செல்கின்றனர். இதற்கான பாராட்டுக்கள் இந்திய அளவில் ரோஜாவிற்கு குவிந்த வண்ணம் உள்ளன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top