அறிஞர் அண்ணாவை கிண்டல் செய்த கட்சி பேரவை.. திட்டமிட்டு எம்ஜிஆருக்கு முன் கொடுத்த பதிலடி

இந்தியாவிலேயே நடிகராக இருந்து நாட்டின் முதல்வராக மாறிய முதல் நபர் எம்ஜிஆர். இப்போதும் யாராவது தானம், தர்மம் செய்தால் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே வாரி கொடுக்கிறார் என்றே பாராட்டப்படுகின்றனர். அதற்குக் காரணம் எம்ஜிஆரிடம் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனே செய்துவிடுவாராம். இளமையில் வறுமையை எம்ஜிஆர் நேரில் அனுபவித்தார். அதனால்தான் அவரது பிற்கால வாழ்க்கையில் எளியோருக்கு உதவி செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற பழமொழிக்கு இணங்க எம்ஜிஆர் செய்யும் உதவியை வெளியில் ஒரு தடவை கூட சொல்லி காட்ட மாட்டாராம். அதற்கு எடுத்துக்காட்டாக அண்ணா, எம்ஜிஆர் இடையே நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. பல பிரச்சினைகளுக்கு பின்பு 1967 இல் அண்ணாவின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது. இக்கட்சியின் முக்கிய சக்தியாக எம்ஜிஆர் இணைந்து இருந்தார்.

அண்ணா ஆட்சியை பிடித்த சில மாதங்களிலேயே உடல் நலம் சரியில்லாமல் போனது. அண்ணாவுக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்து அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். அண்ணா நலம் பெற்று திரும்பிய பிறகு 1968இல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி கேள்வி நேரத்தில் முதல்வரான அண்ணாவை நோக்கி கேள்வியை எழுப்பினார்.

நீங்கள் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றதற்கு செலவு எவ்வளவு ஆனது. அது உங்கள் சொந்த பணமா, அரசியல் பணமா அல்லது கட்சி செலவா என அனந்தநாயகி கேள்வி கேட்டார். அப்போது அண்ணா சபையை சுற்றிப்பார்த்து உங்கள் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன் எனக் கூறினார். உடனே காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் அண்ணாவைப் பார்த்து சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதை கேள்வி நேரத்தில் அனந்தநாயகி கேள்விக்கு அண்ணா பதிலளித்தார். நான் சிகிச்சை பெற்ற முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை, அரசும் கொடுக்கவில்லை, எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை. என் சிகிச்சைக்கு செலவான ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் மொத்தமும் எங்கள் கட்சியின் உறுப்பினரும், என் அன்புத் தம்பியுமான எம்ஜிஆரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவழித்தார் என்ற ஆதாரத்தை அண்ணா எல்லோர் முன்னும் காட்டினார்.

அத்துடன், நேற்று சட்டப்பேரவைக்கு எம்ஜிஆர் வராததால் என்னால் இந்த விளக்கத்தை சொல்ல முடியவில்லை. எம்ஜிஆரை நேரில் வைத்து தான் இதை சொல்ல வேண்டும் என்பதால் இன்று இதற்கான பதிலை அளித்தேன் என்றார். உடனே அரங்கம் முழுவதும் கரவொலி எழுந்தது. எம்ஜிஆர் வறுமையில் இருந்த போதும் சரி, மலைபோல் பணம் இருந்தபோதும் தான் செய்யும் உதவியை ஒரு போதும் வெளியில் அவர் சொன்னதே இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்