Connect with us
Cinemapettai

Cinemapettai

அர்ஜுன் கட்டிய பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோவில் – சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அர்ஜுன் கட்டிய பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோவில் – சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

அர்ஜுன் என்பதனை விட ஆக்ஷன் கிங் அர்ஜுன் என நம் மனதில் பதிந்தவர். கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தவர் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மாஸ் கட்டி வருகிறார்.

சிறுவயதில் போலீஸ் ஆகவேண்டும் என்பதே இவரின் ஆசை, ஆனால் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என கலக்கி வருகிறார் . அர்ஜுன் ஹனுமனின் தீவிர பக்தர். இவர் தனது இடத்தில கோவில் கட்ட திட்டமிட்டது அனைவரும் அறிந்ததே.

சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் “அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: என்ற கோவில் கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழா சமீபத்தில் (02.07.2021) நடைபெற்றது. ஶ்ரீ ராமர், விநாயகர்,  சன்னதிகளும் உள்ளன. ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை 180 டன் எடையுடையதாம். கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்டு அங்கிருந்து பெரிய டிரக்கில் சென்னை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பெரிய விழாவாக நடைபெற வேண்டிய இந்த கும்பாபிஷேகம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து  சுவாமி தரிசனம் பெற்றார்.

anjeneya temple

“இந்தக் கோவிலை நான் கட்டினேன் என்பதைவிட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்தச் செயலை செய்யத் தூண்டியது என்பதுதான் உண்மை.” என அர்ஜுன் சொல்லியுள்ளார். விரைவில் இந்தக் கோவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top