fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் சின்ன திரையில் கம் பேக் கொடுக்கிறார் அஞ்சனா. எந்த டிவி என்ன நிகழ்ச்சி தெரியுமா ?

anjana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் சின்ன திரையில் கம் பேக் கொடுக்கிறார் அஞ்சனா. எந்த டிவி என்ன நிகழ்ச்சி தெரியுமா ?

ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கப்போவதாக அஞ்சனா ரங்கன் மகளிர் தினத்தன்று தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

அஞ்சனா ரங்கன் சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. சின்னத்திரை வாயிலாக நம் வீட்டிலும், மனிதிலும் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.

இவர் கயல் சந்திரனை காதலித்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2015 இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகனும் உண்டு. தன் மகனுடன் தான், அதிக நேரம் செலவிட்டு வந்தார் அஞ்சனா.

VJ ANJANA – KAYAL CHANDRAN

சமீப நாட்களாக இவர் போட்டோஸ் அப்லோட் செய்வது, ப்ராண்ட்ஸ் ப்ரொமோட் செய்வது என சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். நேரில் பார்த்தாலும் சரி, வினயமாக இருந்தாலும் இவரை பலரும் கேட்கும் ஒரே கேள்வி “மீண்டும் எப்போ டிவிக்கு வரப்போறீங்க ?” என்பதே ஆகும்.

இந்நிலையில் அஞ்சனா தனது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “10 வருடமாக சன் குழுமத்தில் நான் வீடியோ ஜாக்கியாக இருந்த அனுபவம் தான், தன்னம்பிக்கை உடையவளாக ஸ்க்ரீன் முன் மற்றும் பின்னும் நான் இருக்க காரணம். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டேன், தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளேன் . உங்களின் அன்பும், ஆதரவும் எப்பொழுதும் போல தேவை. ” என்று பதிவிட்டுள்ளார்.

தன் வாழக்கையில் மட்டுமல்ல வேலையிலும் அடுத்த லெவெலுக்கு செல்லும் அஞ்சனாவுக்கு சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள் சகோதரி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top