Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த தொகுப்பாளினி அஞ்சனா..
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். இதனால், அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றார். தொலைக்காட்சியில் பல வருடமாக தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. குழந்தைத்தனமான முகத்துடன் இவரின் ஆங்கரிங்கிற்கு பலரும் அடிமை என்று தான் கூற வேண்டும். டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாது பல சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அஞ்சனா தான் முதல் தேர்வு என்ற நிலையில் இருந்தார்.
தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் இருப்பது போல அஞ்சனாவிற்கு ஒரு கூட்டம் இருந்து தான் வருகின்றனர். இதை தொடர்ந்து, நடிகர் சந்திரனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் அறிமுகமானவர். திருமணத்திற்கு பின்னரும் தன் நிகழ்ச்சியில் அஞ்சனா தொடர்ந்து ஆங்கரிங் செய்து வந்தார்.
இதையடுத்து, இந்த வருட தொடக்கத்தில் தன் வேலையை விடுவதாக டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார் அஞ்சனா. அப்பதிவில், ஒரு நல்ல விஷயத்திற்காக இந்த இடைவேளை தேவை. இதனால் 10 வருடமாக பணியாற்றி வந்த சன் தொலைக்காட்சியில் இருந்து விலகுகிறேன். இதுவரை எனக்கு துணையாகவும், அன்பாகவும் இருந்தவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, அஞ்சனா கர்ப்பமாக இருக்கிறாரோ என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவரும், கணவர் சந்திரனும் மௌனம் காத்து வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்கள் சந்தேகம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆம், அஞ்சனா கர்ப்பமாக தான் இருக்கிறார். இதை அவரின் கணவரும், நடிகருமான கயல் சந்திரனே உறுதி செய்து இருக்கிறார். சந்திரனும், அஞ்சனாவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
