முதன்முறையாக தன் குழந்தை போட்டோ வெளியிட்ட அஞ்சனா

தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவருக்கு தொலைக்காட்சியில் ரசிகர்கள் நிறைய உள்ளனர். இவர் எந்த திரைப்படத்திலும் தற்போதுவரை நடிக்கவில்லை ஆனால் சினிமா நண்பர்களுடன் தன் நட்பை தொடர்ந்து வருகிறார்.

அஞ்சனா, நடிகர் கயல் சந்திரன் பல நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்திரன் சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் புகைப்படத்தை தற்போதுவரை இவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அவரது ரசிகர்கள் அவர்களின் குழந்தையின் புகைப்படத்தை காண எதிர்பார்த்து வந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது.

கயல் சந்திரன், ஆனந்தி இவர்கள் இருவருடன் தன் குழந்தையை கையில் வைத்தபடி ஒரு புகைப்படத்தை தற்போது சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும் இவர்களின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment