Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஞ்சலி நடிப்பில் 3 டி யில் உருவாகும் “லிசா” ஹாரர் பட பர்ஸ்ட லுக் போஸ்டர் !
Published on
பி ஜி மீடியா ஒர்க்ஸ்
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
பி ஜி முத்தய்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம். ராஜா மந்திரி, பீச்சாங்கை, மதுரை வீரன் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படம் “லிசா”.
ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் அஞ்சலி தான் ஹீரோயின். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். இசை சந்தோஷ் தயாநிதி. எடிட்டிங் கெளதம். இப்படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக உள்ளனர் . இந்த தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் இது தான்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை அஞ்சலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Lisa
வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் வெளியாகும்.
