கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் காளி. இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது .

இப்படத்தில் சுனைனா, அம்ரிதா மற்றும் கன்னட நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிப்பதை நாம் ஏற்கனவே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.

இவர்களுடன் நான்காவது கதாநாயகியாக தற்பொழுது அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது. இதை படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தரமணி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் . மேலும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த பலூன் படம் ரிலீசாக ரெடியாக உள்ள நிலையில் , இப்படத்தில் அவர் இணைந்ததால் கட்டாயமாக இது பவர்புல்லான ரோல் ஆகதான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது .