கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சலி. அங்காடி தெரு மூலம் அனைவரது மனதிலும் நல்ல நடிகையாக இடம்பிடித்தவர்.

சில குடும்ப சர்ச்சைகள் காரணமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்தவர் மீண்டும் தமிழ் படங்களில் தற்போது நடிக்கத் துவங்கியுள்ளார்.

இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் காளி மற்றும் பேரன்பு. சரி நம்ம தங்கச்சி மேட்டருக்கு வருவோம். அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் தற்போது நடிகையாக களமிறங்க உள்ளார்.

ஏற்கனவே இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகிவிட்ட இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பட்டப்படிப்பை முடித்த இவர் வெஸ்டர்ன் மற்றும் கிளாஸிக்கல் நடனங்களை முறையாக கற்றவராம்.

தன் அக்காவை போல் தன்னையும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆரத்யா.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடப்பாவிகளா ஆரத்யா அஞ்சலியோட சொந்த தங்கச்சி இல்லைடா. அதுக்கே இவ்வளவு பில்ட்டப்பா!