‘சகலகலா வல்லவன்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது அஞ்சலியின் கைவசம் மாப்ள சிங்கம், இறைவி, பேரன்பு என மூன்று தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. அதோடு ராமின் ‘தரமணி’யில் கெஸ்ட் ரோல் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர தெலுங்கிலும் 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், கதாநாயகியை முன்னிறுத்தி எடுக்கப்படவிருக்கும் ‘காண்பது பொய்’ என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் அஞ்சலி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இன்றுமுதல் படப்பிடிப்பையும் துவங்கியிருக்கிறார்கள்.

ஸ்ரீஜெய் சாய் மூவீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை எல்.ஷர்வேஷ் என்பவர் இயக்குகிறார். ஜீன்ஸ் பேன்ட், கட்டம்போட்ட சட்டையுடன் ஆண்மை கலந்த போல்டான பெண்ணாக அஞ்சலியின் தோற்றம் ‘காண்பது பொய்’யில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.