Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஞ்சலி நடிக்கும் பேய் படமான லிசா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!
Published on
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி இவர் கடைசியாக நடித்த திரைபடம் காளி. இந்த திரைப்படம் திரையில் ஓடிகொண்டிருக்கிறது மேலும் நாடோடிகள்-2 படத்திலும் நடித்து வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.
அஞ்சலி பேயாக நடிக்கும் லிசா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். 3டி தொழில்நுட்பத்தில் கதா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இந்த படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கிறார்.
நயன்தாராவுக்கு மாயா படம் ஏற்படுத்திக்கொடுத்த இடத்தைப் போல, நடிகை அஞ்சலி லிசா படம் பெரிய இடத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
