Tamil Cinema News | சினிமா செய்திகள்
வவ்வால் போல் தொங்கும் அஞ்சலி.. ரசிகரின் கமெண்டை உற்று பார்த்தால் ஒரு மணி நேரம் சிரிக்கலாம்
நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.
இவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் “சிந்துபாத்” என்ற படத்தில் நடித்திருந்தார். சசிகுமாருடன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த நாடோடிகள் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது
தற்போது தலைகீழாக யோகா செய்யும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வால் போல் தொங்கும் அஞ்சலி, தலைகீழா நின்னாலும் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன், வாவ் சூப்பர் என்று ரசிக்கும்படியான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

anjali-yoga
