Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-thalapathy-2021

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யுடன் நடிக்க தவமாய் காத்து இருக்குறேன்..! பிரபல நடிகை பேட்டி

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய், அதன்பிறகு எங்கேயும் எப்போதும், சிங்கம் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பேட்டிக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் இவரைப் பற்றி வரும் கிசுகிசுக்களை பற்றி கேள்வி எழுப்பினர். முதலில் நீங்கள் ஜெய் காதலித்ததாகவும் தற்போது பிரேக்கப்பில் முடிந்துள்ளதாகவும் கேள்வி கேட்டனர். அதற்கு அஞ்சலி நான் எப்போது ஜெய் காதலித்தேன் நீங்களே எழுதி கொள்கிறீர்கள் பின்பு நீங்களே நிறுத்தி விடுகிறார்கள் என சிரித்தபடி பதில் அளித்தார்.

விஜய் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என கேள்வி கேட்டதற்கு நான் விஜய் சார் படத்தில் நடிக்க மிக ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் சென்னை வந்தபோது எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் விஜய் சார் நடித்த ஷாஜகான் படத்தை பார்த்தேன். அவருடன் எப்போதாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் ஓடிப்போய் நான் தான் நடிப்பேன் எனவும் தெரிவித்தார். உங்களுக்கு காதல் ப்ரபோஸ் வந்ததா என கேள்வி கேட்டனர். அதற்கு அஞ்சலி நான் கல்லூரியில் படிக்கும்போது பலர் என்னிடம் காதல் சொல்லியுள்ளனர். ஆனால் நான் அவர்கள் கொடுக்கும் சாக்லேட்டை தின்றுவிட்டு அவர்கள் கொடுக்கும் பூவை அவர்களுக்கே கொடுத்து விடுவேன் என மிக ஜாலியாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top