Anjala Movie Review & Rating – அஞ்சல விமர்சனம்

anjala-reviewநம் வாழ்க்கையில் பல முக்கியமான சம்பவங்கள் ,முடிவுகள் என பலதும் நாம் டீ கடையில் இருந்து எடுத்திருக்கிறோம்.பல கோடிகளில் படம் வரும் இந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் குடிக்கும் ஒரு டீ எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கும் ஒரு முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் இந்த அஞ்சல.

கதை 

நூறு ஆண்டுகள் மிக பழமையான டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார் பசுபதி நன்றாக செல்லும் டீ கடையில் இடி விழுந்தது போல அரசால் ஆபத்து வருகிறது . தனது டீ கடையை எப்பிடியும் காப்பாற்றி விட வேண்டும் என்று நீதிமன்றத்தைநாடுகிறார் அஞ்சல டீ கடையின் மூன்றாம் வாருசு பசுபதி .

இந்த பிரச்சினை இருக்கும் நேரத்தில்தான் வருகிறது இன்னொரு தலைவலி விமல் தன் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் ஒரு பிரச்னை வந்து அவர்களின் வாழ்க்கை திசை மாறி கேள்விகுறியாகிறது இதற்கும் அந்த அஞ்சல டீ கடைதான் காரணம் என்று சொல்லி அஞ்சலையை தள்ளி வைக்கிறார்கள் .

அஞ்சலை டீயும் பிரச்சினை அதனால் அனைவருக்கும் பிரச்சினை என்ற நிலை உருவாகிறது.இறுதியில் விமல் நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது பசுபது அரசிடம் இருந்து அஞ்சலையை காப்பாற்றினாரா என்பதே மீதி கதை .

விமர்சனம் 

அண்ணே ஒரு டீ என சொல்லிவிட்டு போகும் நாம் இந்த அஞ்சல டீ கடை அப்பிடி இல்லை என்பதற்கு கூறும் கதை டீயும் ,டீ கடைகளின் மேல் நமக்கு மிகுந்த மரியாதையை உருவாகிறது .

விமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக அழகாக வெளிப்படித்தியுள்ளார்.அட்டக்கத்தியில் கண்ணுக்கு தெரியாமல் மங்கலாக இருந்த நந்திதா இப்பொது மினுங்கும் கற்கள் போல ஆகிவிட்டார் நடிப்பிலும் கூட .வாய் கிழிய கிழிய பேசும் பேச்சு பாராட்டும்படி உள்ளது.விமல்-நந்திதா இருவரும் காதல் செய்யும் காட்சிகளில் எந்த விதமான ஒரு சுவையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் .

சிறப்பு 

படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்ல வேண்டும் பசுபதியை சண்டைகாட்சியிகள்,பாடல்கள்,காதல் இவை அனைத்தும் இல்லை.தன்னையும் தன் அஞ்சல டீயையும் நம்பி வந்த நண்பர்கள் தன்னை விட்டு செல்லும் போது பசுபதியின் நடிப்பு பார்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேற்கும் விதமாக இருக்கிறது பின்னணி இசையில் எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு அருமையாக உள்ளது.ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை கிராம மக்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியுள்ளார் .

ரிசல்ட் 

மொத்தத்தில் “அஞ்சல”டீ கடை என்பது வியாபாரம் செய்யும் இடம் அல்ல ஒரு தலைமுறையின் அடையாளம் .

ரைடிங் : 3.0/5