புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நேரலையில் விக்ரமனை கலாய்த்து மொக்கை வாங்கிய அனிதா சம்பத்.. மாமா குட்டிக்கு வந்த சோதனை

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அசீம் தேர்வானது இப்ப வர யாராலும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இருப்பினும் மக்கள் மனதில் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என சோசியல் மீடியாவில் அவருக்கு ஆதரவு குவிந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் விக்ரமன் நேரலையில் இருக்கும்போது பிக் பாஸ் பிரபலம் ஒருவர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அவர் ஜெயிக்காததற்கு வாழ்த்து கூறிய பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மட்டுமல்ல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விக்ரமனுக்கு ட்ராபி கிடைக்காததற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: காயத்ரி ரகுராம் இடத்தை பிடிக்க வரும் பிக் பாஸ் பிரபலம்.. தன்மானத்தை காப்பாற்ற இப்படியும் உருட்டலாமா?

இதற்கு காரணம் அவர் ஜெயிக்காதனால்தான் நிறைய விஷயங்களை மக்கள் பேசுகின்றனர். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் எந்த அளவிற்கு இதற்கு முன்னாடி அப்யூஸ் பண்ணப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் பிஆர் என்கின்ற விஷயம் எந்த அளவிற்கு வேலை செய்கிறது. மக்களின் மைண்ட் செட் எந்த அளவிற்கு மாற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி விக்ரமனை விக்கு என்றும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அழைத்ததால், அவர் தற்போது சீசன் 6 மாமா குட்டியா என்றும் அனிதா சம்பத் விமர்சித்திருக்கிறார்.

Also Read: விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மனைவி கைது.. அம்பலமான சிசிடிவி ஆதாரம்

இவருடைய பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள், ‘அல்டிமேட்டில் நிரூப்புடன் நீ கொஞ்ச நஞ்ச சேட்டையா செஞ்ச!’ என்று கிழித்து தொங்க விடுகின்றனர். ஏனென்றால் அனிதா சம்பத் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் திருமணமானதை மறந்து கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டார்.

அதிலும் அவர் பேசிய கெட்ட வார்த்தை அந்த சமயம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசியது மட்டுமல்லாமல் அவர் தரத்தை குறைத்து கொண்டார். அப்படி இருக்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அப்யூஸ் பண்ணப்படுகின்றனர் என அனிதா சம்பத் சொல்லி இருப்பது எந்த விதத்தில் சரி என பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் பிரபல சேனல்.. புதிய சீரியல்களை தரையிறக்கியதால் திண்டாடும் விஜய் டிவி

- Advertisement -

Trending News