சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அனிதா சம்பத் தேவையில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
அனிதா சம்பத் என்றாலே கிரஸ் என்ற ரேஞ்சில் வைத்திருந்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தங்களது மனதில் இருந்த அவரை தூக்கி வீசி விட்டனர். இது அவருக்கே தெரிந்திருக்கும்.
அடிக்கடி அனிதா சம்பத் பற்றி ஏதாவது ஒரு செய்தி இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அடுத்ததாக விரைவில் அனிதா சம்பத் தன்னுடைய கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு வலைதளம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் டிவி ராசியோ என்னமோ தெரியவில்லை. விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் குறிப்பாக பெண் பிரபலங்களுக்கு திருமணமான கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து நடைபெற்று விடுகிறது.
அந்த வகையில் டிடி என்கிற திவ்யதர்ஷினி, ரம்யா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் அனிதா சம்பத் இணைந்து விடுவாரோ? என்ற நிலையில் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அனிதா சம்பத்.
சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் அந்த வலைதளம் தேவையில்லாமல் இப்படி வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இது உண்மை இல்லை என்ற விஷயத்தை தெரிவித்துள்ளார் அனிதா சம்பத்.