அனிதாவிற்க்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங் போட்ட ஒரு ட்வீட்டால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

‘மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்’ என அனிதா தற்கொலைக்கு காரணமே தெரியாமல், அதற்க்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் ட்விட்டியிருந்தார் ரித்திகா சிங்.

அதை பார்த்தவர்கள் “முதலில் எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்” என தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள் என அவரை வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர்.

பின்னர் இதுபற்றி விளக்கமளித்த ரித்திகா “எனக்கு எல்லாம் தெரியும். ஒரு உயிர் போனது பற்றி பேசினேன்” என கூறியுள்ளார்.