அனிதாவின் மரணம் குறித்து நாடு முழுவதும் போர்க்கொடி பறந்திருக்க இது குறித்து முன்னணி மூத்த நடிகர்களான ரஜினி மற்றும் கமல் கூறியதை பாப்போம்.

ரஜினியின் கருத்து:

அனிதாவிற்கு நடந்த கொடுமை ஏற்கத்தக்கதல்ல. அவள் தற்கொலை செய்வதற்கு முன் அவள் மனம் எவ்வளவு வலியை சுமந்திருக்கும் என என்னால் உணரமுடிகிறது. எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவளது குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றேன்.

கமலின் கருத்து:kamal

இதை விட அவலம் வேறு வேண்டுமா? அவள் ஸ்ருதியாகவோ, அக்சராவாகவோ இருந்தால்தான் நான் போராட வேண்டுமா? அனிதாவும் எனது மகள்தான். அனிதாவின் சாதி மதம் பற்றியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள், சாதி மதம் மாநிலம் கடந்து நாம் அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

கனவோடு இறந்த பெண்ணை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டோம். தோழர் திருமாவளவன் பொங்கி எழ வேணும், அவர் ஊர்காரர் என்பதால் சொல்கிறேன். ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம்.

அரசும் சட்டமும் நாம் வைத்ததுதான், ஒரு உயிரை பறித்துத்தான் பாடம் கற்க வேணுமாயின் அந்த பாடம் எங்களுக்கு வேண்டாம் அதை நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம்.மக்கள் இதனை கண்டு கொந்தளிப்பர். அவர்கள் கொந்தளிப்பை இந்த நாடு தாங்காது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இனியாவது ஒரு நல்ல முடிவை நோக்கி பயணிப்போம்

 

அதிகம் படித்தவை:  சூப்பர்ஸ்டாருடன் கைகோர்த்த இளையதளபதி விஜய்