Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் அனிதா அப்பா செய்த கேவலமான வேலை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அதிக அளவில் ப்ரோமோகளில் வந்தவர் தான் அனிதா சம்பத்.
அதாவது பொய் சொல்வதிலும் எரிச்சல் படுத்துவதிலும் ஜூலியவே தட்டி தூக்கிட்டாங்க அனிதா. இவ்வாறு இருக்க பிக்பாஸில் பங்கேற்றுள்ள அனிதாவை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றும் நிலையில், அனிதாவின் அப்பா செய்துள்ள தரங்கெட்ட காரியம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஏனெனில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது அவருக்கு மக்களிடையே கிடைத்த நல்ல பெயரும் வரவேற்பும் தற்போது தலைகீழாய் மாறியுள்ளது.மேலும் தற்போது அனிதா என்ற பெயரை சொன்னாலே திட்டித் தீர்க்கும் மக்கள் தான் அதிகமாய் உள்ளனர்.
அதாவது அனிதாவுக்கு ஆதரவாகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் எண்ணத்திலும் பத்தாம் வகுப்பு மாணவனை போல ஏமாற்றுவேலை செய்து அனிதா பெயரையே டோட்டல் டேமேஜ் செய்துள்ளார் அவரது அப்பா.
ஏனெனில் அனிதாவின் பிரேவியஸ் பற்றிய யூடியூப் சேனல்- ன் விமர்சனத்திற்கு தான் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் எனக்கூறி கமெண்ட் போட்டுள்ளார் சம்பத்.
மேலும் அந்த போஸ்டில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, ‘நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க. அனிதா சம்பத் எனக்கு தெரிஞ்சவங்க. நான் பத்தாவது பீஸ் கட்ட காசு இல்ல. அப்போ அவங்க தான் பீஸ் கட்டி எக்ஸாம் எழுத ஹெல்ப் பண்ணினாங்க. ஒரு வார்த்தை தெரியாம பேசிட்டா அவங்கள கெட்டவங்க என்று முத்திரை குத்தாதீங்க ப்ளீஸ்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு யூடியூப் சேனலில் பதிவிட்ட அனிதாவின் அப்பா தன்னுடைய ஐடி பெயரையும், போட்டோவையும் மாற்றாமல் இப்படி ஒரு கேவலமான வேலையை செய்துள்ளார்.

anitha-cinemapettai-biggboss
இதனை பார்த்த சமூக வலைதள வாசிகள் அந்த கமெண்ட்ல் உள்ள அவருடைய போட்டோ மற்றும் அனிதா சம்பத் ஃபேமிலி போட்டோ என கம்பர் பண்ணி ‘எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்புண்ணு’ கழுவி ஊத்திட்டு இருக்காங்க.
