Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்கெட்ச் போட்டு நாமினேஷன்ல இருந்து தப்பிச்ச அனிதா.. தவளை தன் வாயால கெட்ட கதைதான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ்4 நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முதலாக நாமினேஷன் டாப்புள் பாஸ் வழங்கப்பட்டது.
மேலும் அந்தப் பாசை பயன்படுத்தி நாமினேட் ஆனவர்களில் ஒருவர் வீட்டில் உள்ள மற்ற ஒருவரை நேரடியாக நாமினேட் செய்துவிட்டு இந்த வார எவிக்சனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற சக்தியும் வழங்கப்பட்டது.
இதற்காக கார்டன் ஏரியாவில் நடத்தப்பட்ட டாஸ்கில் மெஜாரிட்டியாக வின் பண்ணியது நிஷா தான். ஆனால் அனிதா, ‘எனக்கு விட்டுக் கொடுக்குறதுல விருப்பமே இல்லை, இந்த கேமை முடிக்கணும்னு நான் நினைக்கிறேன், அதனால வச்சுக்கோங்க’ என்று நிஷாவிடம் கொடுத்தார்.
இதனால் கடுப்பான நிஷா, ‘நீ எனக்கு பிச்சையா போடுற? எனக்கு வேண்டாம், நீயே அத வச்சுக்கோ’ என்று அந்தப் டாப்பிளை அனிதாவிற்கு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அனிதா அதனை வாங்கிக் கொண்டு சம்யுக்தாவை நேரடியாக நாமினேட் செய்தார்.
இந்த நிலையில் இதுபற்றி அனிதா பாலாஜியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘அது நிஷாவுக்கு கிடைச்சிருந்தா ஆஜித்த நாமினேட் பண்ணி இருப்பாங்க.. சனம் கிடைச்சிருந்தா ஷிவானிய நாமினேட் பண்ணியிருப்பாங்க.. சம்யுக்தா வெளிய போகணும்னு தான் நான் அந்த பாஸ வாங்கினேன், இதுதான் என்னோட பிளான்’ என்று உடைத்து கூறினார்.
இந்த தகவல்கள் தற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

anitha-sampath-1
