Tamil Cinema News | சினிமா செய்திகள்
இளையராஜா இடத்தில் அனிருத்.. அடக்கடவுளே! எப்படி தெரியுமா?
ஆமாம், இன்று இளையராஜா இடத்தில் அனிருத் உள்ளார். இளையராஜாவின் ஆரம்பகட்டத்தில் ஏவிஎம்மில் தான் தன்னுடைய பாடல்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார். அங்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய இடத்தை பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு மாற்றினார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சுமார் முப்பது வருடங்களாக காலை ஏழு மணி முதல் மாலை வரை ஒருவேளை அதிகமாக வேலை இருந்தால் இரவு ஒரு மணி வரை பிரசாந்த் ஸ்டூடியோ தான் தன்னுடைய வீடு வாசல் உலகம் என இளையராஜா இருப்பார்.
ஆனால் சில வருடங்களாக இளையராஜாவுக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் 30 வருடங்களாக இசை அமைத்த இடத்தில் இன்றும் காலை 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வருவதும், படங்களுக்கு இசை அமைக்கும் வேலை இருந்தால் செய்வதும், இல்லையென்றால் சோபாவில் அமர்ந்திருப்பதும் வேலையாக வைத்திருந்தார்.
மத்தியானம் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார் இளையராஜா. மேலும் சில வருடங்களாக ஸ்டூடியோவுக்கு வாடகை தராமல் இருந்துள்ளார். அன்று இருந்த பிரசாத் ஸ்டூடியோவின் ஓனர் இளையராஜா இருக்கும் வரை இந்த ஸ்டூடியோ அவருக்குத்தான் என நிரந்தரமாக கூறினார். அவர் மறைந்து விட இப்பொழுது அவருடைய மகன் அந்த ஸ்டூடியோவை பார்த்துக்கொள்கிறார்.
வேலை இல்லாமல் ஏன் இவர் இருக்கிறார் என கடுப்பான அவர் ஸ்டூடியோவை காலி செய்யுமாறு கூறி உள்ளார். ஆனால் இளையராஜா செல்ல மறுக்க இவர்களுக்கு ஏற்பட்ட சண்டை சச்சரவு இன்று வெளி உலகத்துக்கு வந்துள்ளது. விசாரித்ததில் அந்த ஸ்டூடியோவில் இப்பொழுது அனிருத் கால் வைப்பதாக உள்ளது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது.
