எல்லாமே ஹிட்டு! வைரலாகி வரும் அனிருத்தின் சிங்கிள்கள்

சினிஷ் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி நடிப்பில் உருவாகிவரும் படம் பலூன். இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் முதன் முறையாக அனிருத் பாடுகிறார் என்ற தகவல் சில நாட்கள் முன் வெளியானது.

அந்த தகவலில் சொல்லப்பட்டதுபோல் அனிருத்தின் குரலில் பலூன் படத்தின் ஒரு பாடலின் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஷட் அப் பண்ணுங்க என்னும் வார்த்தைகளை கொண்ட இந்த பாடலின் இசை வித்யாசமாக உள்ளது.

இதோ அந்த ஷட் அப் பண்ணுங்க பாடல் சிங்கிளின் வீடியோ உங்களுக்காக

இதோ போல் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள் கருத்தவன்லாம் கலீஜாம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடி இசையமைத்துள்ளவர் அனிருத்.

இந்தப்பாடலின் வீடியோ உங்களுக்காக

ஒரே நாளில் அனிருத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அனிருத்னாலே ஹிட்னு ஆகிருச்சு

Comments

comments

More Cinema News: