anirudh
anirudh

அனிருத் ரவிச்சந்திரன், ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னனி பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.

anirudh

இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக ஒய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர்.

அனிருத், நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார். லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இன் உறவினர் மகன்.

anirudh-rumour
anirudh

அனிருத் ஜினகஷ் என்ற இசைக்குழுபள்ளியில் பயின்றார். அவரது 21-ம் வயதில் ‘3’ படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார். இது மிக பெரிய வெற்றியை ஈட்டியது.

தற்போது, இவர் தனது இசை பயணத்தை பல்வேறு வெற்றி பாதையை நோக்கி முன்னேறி செல்கிறார்.

Anirudh Ravichander-Marriage
Anirudh Ravichander

எந்த துறையிலும் ஜெயிக்க வேண்டும் என்றால் ஏதாவது க்ளிக் ஆக வேண்டும். அப்படி சினிமாவில் வெற்றி இசையமைப்பாளராக இருக்க விரும்பும் பிரபலங்களில் ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தாண்டி வெளிநாடு வரை பிரபலமானவர் அனிருத்.

இவர் இசையில் முதன்முதலாக வெளியான கொலவெறி பாடல் 6வது வருடத்தை எட்டியுள்ளது. இதனால் அனிருத் அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்..

அப்போது அவரிடம் சினிமாவில் பிடித்த நடிகர்கள் யார் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், அமீர்கான் போன்றவர்களை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.